TNPSC Thervupettagam

4 கிங்பிஷர் உயிரினங்களின் கண்டுபிடிப்பு

April 12 , 2018 2290 days 793 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா வன விலங்கு சரணாலயத்தில் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நான்கு கிங்பிஷர் (மீன் கொத்தி) பறவை வகைகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் 12 வகையான மீன்கொத்திப் பறவை வகைகளைக் காண முடியும். அவ்வாறு காணப்பட்டுள்ள பறவை வகைகளாவன
    • பல வண்ண மீன்கொத்திப் பறவை (செரில் ரூடிஸ் - Ceryle rudis)
    • வெள்ளைத் தொண்டை கொண்ட மீன்கொத்திப் பறவை (ஹால்சியான் ஸ்மையிர்நென்சிஸ் - Halcyon smyrnensis)
    • கறுப்புத் தலையையுடைய மீன் கொத்திப் பறவை (ஹால்சியான் பைலியேட் - Halcyon pileate)
    • பொதுவான மீன் கொத்திப் பறவை (அல்சிடோ அதிஸ் - Alcedo atthis)
  • சரணாலயத்தில் கண்டறியப்பட்ட இந்த நான்கு வகைகளும் ஈரநில சுற்றுச்சூழலின் மீது முதன்மையாக ஈர்ப்பு கொண்ட வகையில் ஈர நிலத்தை நம்பியுள்ள உயிரினங்களாகும்.
  • இந்த நான்கு உயிரினங்களின் பாதுகாக்கப்பட்ட நிலையானது குறைந்தபட்ச கவலை (Least Concern) என்ற நிலையைக் கொண்டாகும்.
  • மீன்கொத்திப் பறவை, கோராசிபார்ம் (Coraciiform) வகையைச் சேர்ந்த பிரகாசமான வண்ணங்களால் ஆன சிறிய-நடுத்தர அளவிலான வகையைச் சேர்ந்த பறவைகளாகும்.

கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம்

  • கிருஷ்ணா வன விலங்கு சரணாலயம் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயம் மற்றும் உவர்நிலம் ஆகும்.
  • அசலான மாங்குரோவ் காடுகளை மிகுதியாகக் கொண்டிருப்பதால் இந்த சரணாலயம் உலகின் மிக அரிதான ஒரு உயிர்ச்சூழல் மையமாகும்.
  • தென்னிந்தியாவில் கடைசியாக எஞ்சியிருக்கும் அடர்த்தியான முதன்மை மாங்குரோவ் காடுகளின் பகுதி இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஆந்திரப் பிரதேசத்தின கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது.
  • கிருஷ்ணா நதியின் முகத்துவாரம் இதன் வழியாக செல்கிறது. இந்த பகுதி உலகில் ஒரு முக்கிய உயிரினமான மீன்பிடிப் பூனைகளை (fishing cats) கொண்டிருக்கும் திறன் உடைய பகுதி என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்