வட்டியில்லாப் பத்திரங்களை வங்கிகளுக்கு வழங்குவதன் மூலம் 2020-21 ஆம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான நான்கு வங்கிகளில் ரூ.14,500 கோடியை மூலதன முதலீடு செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான அந்த நான்கு வங்கிகள்
சென்ட்ரல் இந்தியா வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பாங்க் ஆஃப் இந்தியா மற்றும்
UCO வங்கி
இது நடப்பு நிதியாண்டான 2020 – 21 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய மொத்த மூலதன முதலீட்டுத் தொகையான ரூ.20,000 கோடியை நிறைவு பெறச் செய்கிறது.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் ரூ.5,500 கோடி முதலீடு செய்யப்பட்டது.