ஆசியப் பிராந்தியத்தில் மக்களாட்சி மற்றும் தேர்தல்களின் நிலை குறித்து விவாதிப்பதற்காக நான்காவது ஆசிய தேர்தல் பங்குதாரர்களின் மன்றம் இலங்கையின் கொழும்புவில் தொடங்கியது.
இதன் கருத்துருவானது “முன்னேறும் தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை - குழுவாக ஜனநாயகத்தை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல்” ஆகும்.
மஹாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி அஸ்வினி குமார் மற்றும் ஒரு அரசு சாரா நிறுவனம் ஆகியோர் இந்தியா சார்பாக இதில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மன்றமானது இலங்கை தேர்தல் ஆணையம் மற்றும் நேர்மையான தேர்தலுக்கான ஆசிய அமைப்பு (ANFREL - Asian Network for free Elections) ஆகியவற்றின் உதவியுடன் தெற்கு ஆசியாவில் முதன் முறையாக நடைபெற்றது.