4வது இந்திய – ஐரோப்பிய 29 வணிக மன்றம் (India-Europe 29 Business Forum - IE29BF) அண்மையில் மார்ச் 5 முதல் 6 வரை புது தில்லியில் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டுக்கான IE29BF மாநாட்டின் கருத்துரு “விரிவுபடுத்தப்பட்ட உறவுகளுக்கான பொருளாதார பார்வையை ஒருங்கிணைத்தல்” (Synergising Economic Vision for Expanded Relations). செக் குடியரசை மையமாகக் கொண்டு IE29BF மாநாடு நடத்தப்பட்டது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிக்கி (Federation of Indian Chambers and Commerce - FICCI) அமைப்பால் 2014- ஆம் ஆண்டு முதல் முறையாக இம்மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.
வணிகம் – வணிகம் மாதிரியிலான சந்திப்பை (Business to Business Meeting) மேம்படுத்துவதே இம்மன்றத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்தியா மற்றும் மத்திய ஐரோப்பியப் பிராந்தியத்தின் 29 நாடுகளுக்கிடையே வணிகப் பரிமாற்றத்தினை மேம்படுத்துவதற்காக ஓர் நிறுவன மேடையை (institutionalized platform) ஏற்படுத்துவதே இம்மன்றத்தின் நோக்கமாகும்.