பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC - Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co-Operation) நான்காவது மாநாடு நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றது.
பிம்ஸ்டெக் அமைப்பிற்கு தற்பொழுது நேபாளம் தலைமை வகிக்கிறது.
இந்த மாநாட்டின் நோக்கம் பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையே தரைவழிப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் மின் செலுத்தத் தொடர் ஆகியவற்றின் இணைப்பை அதிகரிப்பதாகும்.