நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வெனிசுலா உலகிலேயே முதன் முதலாக பிட்காயினை (Bitcoin) அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொள்வதற்காக சங்கேத இணையப் பண வகைகளில் உலகிலேயே பெரியதாக வகைப்படுத்தப்படும் பெட்ரோ (பிட்காயின் போன்றது) வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகள் (Oil reserves), எரிவாயு (Gas), தங்கம் மற்றும் வைரம் ஆகியவற்றின் இருப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பெட்ரோவை (Petro), வரி செலுத்தவும், கட்டணங்கள் (fees) செலுத்தவும், பங்களிப்புகள் (contributions) மற்றும் பொது சேவைகளில் (Public Services) பயன்படுத்தவும் வெனிசுலா நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால், வெனிசுலாவின் பொலிவர் நாணயமதிப்பு குறைந்ததையடுத்து, இந்த பெட்ரோவை (petro) பயன்படுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெனிசுலா அரசு வெளியிட்டுள்ளது.
வெனிசுலா - OPEC (Organisation for petroleum Exporting Countries) அமைப்பின் உறுப்பினர் நாடாகும்.
உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் (Oil reserves) கொண்ட நாடுகளுள் ஒன்றாகும்.
வெனிசுலா ஒரு சோசலிசநாடு (Socialist Country) ஆகும். எண்ணெய் ஏற்றுமதி மூலம் 95% அளவிற்கு அன்னிய செலாவணியைப் பெறும் வெனிசுலா, அதனுடைய வரலாற்றிலேயே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.