நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு நான்கு அடுக்கு ஒழுங்குமுறைக் கட்டமைப்பினை மத்திய வங்கி நிறுவியுள்ளது.
தற்போதுள்ள நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலைமையின் உறுதித் தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற் கொள்ளப்பட்டது.
நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்துவது தொடர்பானப் பரிந்துரைகளை வழங்குவதற்காக S.விஸ்வநாதன் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் உள்ள வைப்புத் தொகையின் அளவு மற்றும் வங்கிகள் இயங்கும் பகுதி ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு அடுக்கு ஒழுங்குமுறைக் கட்டமைப்பினை ஏற்குமாறு அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.