TNPSC Thervupettagam

4-வது இந்திய- ஐரோப்பிய 29 வணிக மன்றம்

March 13 , 2018 2319 days 706 0
  • 4வது இந்திய – ஐரோப்பிய 29 வணிக மன்றம் (India-Europe 29 Business Forum - IE29BF) அண்மையில் மார்ச் 5 முதல் 6 வரை புது தில்லியில் நடைபெற்றது.
  • 2018 ஆம் ஆண்டுக்கான IE29BF மாநாட்டின் கருத்துரு “விரிவுபடுத்தப்பட்ட உறவுகளுக்கான பொருளாதார பார்வையை ஒருங்கிணைத்தல்” (Synergising Economic Vision for Expanded Relations). செக் குடியரசை மையமாகக் கொண்டு IE29BF மாநாடு நடத்தப்பட்டது.
  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிக்கி (Federation of Indian Chambers and Commerce - FICCI) அமைப்பால் 2014- ஆம் ஆண்டு முதல் முறையாக இம்மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.
  • வணிகம் – வணிகம் மாதிரியிலான சந்திப்பை (Business to Business Meeting) மேம்படுத்துவதே இம்மன்றத்தின் முதன்மை நோக்கமாகும்.
  • இந்தியா மற்றும் மத்திய ஐரோப்பியப் பிராந்தியத்தின் 29 நாடுகளுக்கிடையே  வணிகப் பரிமாற்றத்தினை மேம்படுத்துவதற்காக ஓர் நிறுவன மேடையை (institutionalized platform)  ஏற்படுத்துவதே இம்மன்றத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்