TNPSC Thervupettagam

40 இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் நிலையங்கள் மற்றும் இணைய வழி குற்றத் தடுப்பு ஆய்வகங்கள்

October 20 , 2019 1919 days 731 0
  • அதிகரித்து வரும் குற்றங்களைக் கையாளுவதற்காக 40 இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் நிலையங்களையும் இணைய வழிக் குற்றத் தடுப்பு ஆய்வகங்களையும் விரைவில் தமிழ்நாடு பெற இருக்கின்றது.
  • இணைய வழிக் குற்ற வழக்குகளைக் கையாள்வதைத் தவிர, இந்தப் புதிய உள்கட்டமைப்பானது வழக்கமான வழக்குகளைத் தீர்ப்பதற்குத் தேவையான டிஜிட்டல் ஆதாரங்களைச்  சேகரிக்க காவல் துறைக்கு உதவ இருக்கின்றது.
  • இந்தப் பிரத்தியேக இணைய வழிக் குற்றத் தடுப்பு காவல் நிலையங்கள் மற்றும் ஆய்வகங்கள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
    • கைபேசிகள், சிம் கார்டுகள், மடிக் கணினிகள் மற்றும் வன்தட்டுகள் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்ட தரவுகளையும் சேர்த்துத் தரவுகளை  மீட்டெடுப்பதற்கான கருவிகள்.
    • கணினி அமைப்புகளில் ஊடுருவுதலுக்கான மென்பொருள் மற்றும் கணினி அமைப்புகளைக் கண்காணிப்பதற்கான மென்பொருள்.
  • இந்த வகையான காவல் நிலையங்கள் மற்றும் ஆய்வகங்களை  அமைக்க தமிழ்நாடு அரசு 28.97 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்