தமிழ்நாடு மாநிலமானது நெல் கொள்முதலில் 40 லட்சம் டன்கள் வரம்பினைத் தாண்டி மும்முறை சாதனையினை எட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவு 40 லட்சம் டன்களுக்கும் சற்று அதிகமாக இருந்தது.
சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை, 2011-12 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 23.87 லட்சம் டன்கள் என்ற அளவே இதுவரை இல்லாத அளவிலான அதிக கொள்முதலாகக் கருதப் பட்டது.
ஆனால் இது 2019-20 ஆம் ஆண்டில் 32.4 லட்சம் டன்கள் கொள்முதல் மேற்கொள்ளப்பட்ட போது இந்தச் சாதனையானது முறியடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2020-21 ஆம் ஆண்டில் 44.9 லட்சம் டன்களும், 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 43.3 லட்சம் டன்களும் கொள்முதல் செய்யப்பட்டன.