TNPSC Thervupettagam

40 மலையேற்றப் பாதைகள்

October 28 , 2024 29 days 122 0
  • தமிழ்நாடு வனத்துறையானது 40 வழித்தடங்கள் அடங்கிய ஒரு விரிவான பட்டியலை உருவாக்கியுள்ளது.
  • இது ‘ட்ரெக் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் 40 மலைப்பாதைகளுக்கானப் பதிவுகளைக் கொண்ட ஒரு இணைய தளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • www.trektamilnadu.com என்ற இந்த இணைய தளமானது இயங்கலை வழியிலான முன் பதிவுகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கு வேண்டி முன்பதிவு செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.
  • 18 வயதுக்குட்பட்ட அனைவரும் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் செய்யலாம்.
  • 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்று மட்டும் (எளிதான மலையேற்றங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணை தேவை.
  • நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் இந்த 40 தேர்ந்தெடுக்கப்பட்டப் பாதைகள் அமைந்துள்ளன.
  • மலையேற்றங்கள் ஆனது 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்குகள் (மலையேற்றம் ஒழுங்குமுறை) விதிகளுக்கு இணங்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்