TNPSC Thervupettagam

400 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான வெப்பமான நீர்

August 20 , 2024 95 days 160 0
  • ஆஸ்திரேலியாவின் பெருந்தடுப்பு பவளத் திட்டுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் நீரின் வெப்பநிலை கடந்தப் பத்தாண்டுகளில், 400 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • அதன் வடக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தின் கடற்கரையிலிருந்து சுமார் 2,400 கிமீ தொலைவு வரை இந்தப் பவளத் திட்டுகள் நீண்டு காணப்படுகின்றன.
  • 1960 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை சராசரியாக 0.12 டிகிரி செல்சியஸ் (0.22 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை அதிகரித்தது.
  • 600 வகையான பவளப்பாறைகள் மற்றும் 1,625 மீன் இனங்கள் மட்டும் உள்ள இந்தப் பவளத் திட்டுகள் பல்வேறு வகையான இயற்கை இனங்களின் தாயகமாகும்.
  • 2016 ஆம் ஆண்டிலிருந்து, உலகப் புகழ்பெற்ற இந்தப் பவளத் திட்டுகள் அதிக வெப்ப உயர்வினை உண்டாக்கும் உயர் வெப்பநிலை காரணமாக ஐந்து முறை மாபெரும் பவளப் பாறை வெளுப்பு நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்