4000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டப் பழமையான தங்கம்
September 26 , 2022 794 days 438 0
வடக்குப்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொல்லியல் துறை அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கம் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஒரகடம் கிராமத்தில் அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யப் பட்டது.
கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள், வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் ரோமானிய மட்பாண்டங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் 1.5 கிராம் எடையுள்ள 2 தங்க ஆபரணங்களும் இங்கு கிடைத்துள்ளன.
சிறு சிறு காதணிகள், தங்க ஆபரணங்கள், சிறு சிறு வட்ட வடிவச் சில்லுகள், இரும்புப் பொருட்கள் மற்றும் வளையல் துண்டுகள் ஆகியவையும் இங்கு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
இவை 4000 ஆண்டுகள் முதல் 10000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம்.