வடமேற்கு சவூதி அரேபியாவில் ஒரு அழகிய பாலைவனச் சோலையில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான கோட்டை நகரத்தின் பல்வேறு சிதிலமடைந்தப் பகுதிகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழங்கால மக்கள் நாடோடிகள் என்ற நிலையிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு எப்படி மாறினார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் இடம் ஆனது வறண்டப் பாலைவனத்தால் சூழப் பட்ட ஒரு பசுமையான பகுதியாகும்.
இது 2400-2000 BCE காலத்தில் கட்டமைக்கப்பட்ட சுமார் 2.6 ஹெக்டேர் பரப்பிலான ஒரு நகரம் ஆகும் என்பதோடு இது குறைந்தது 1500 BCE மற்றும் 1300 BCE காலம் வரையில் நீடித்திருக்கலாம்.