சர்வதேச இராணுவ மருந்துகள் குழுவின் (international Committee of Military Medicine-ICMM) 42-வது உலக மாநாடு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதப் படைகளின் மருத்துவ சேவைகள் (Armed Forces Medical Service) பிரிவு ஒருங்கிணைத்தது.
வேகமாக மாற்றமடைந்து வரும் உலக பாதுகாப்பு சூழலை உறுப்பு நாடுகள் சரியான வழியில் எதிர்கொள்ள, உறுப்பு நாடுகளிடையே இராணுவ மருந்துகளின் மீதான கூட்டு அறிவுசார் சொத்துகளை மேம்படுத்திடவும், இராணுவ மருந்துகளில் அவற்றிற்கிடையே உள்ள யோசனைகள் மற்றும் அனுபவங்களை பகிர்வதற்கு ஓர் வாய்ப்புக்கான மேடையாக இந்த மாநாடு ஏற்படுத்தப்படுகிறது.
இம்மாநாட்டில் மத்திய சுகாதார துறை அமைச்சகம், ஐநாசபை, செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு போன்றவையும் பங்கேற்றன.
இந்த 42-வது சர்வதேச மாநாட்டின் கருத்துரு “எல்லையைக் கடக்கும் ராணுவ மருந்துகள் ; தொலைநோக்குப் பார்வையுடன்” (Military Medicine in Transition; looking Ahead)
5 நாள் நடைபெறும் இம்மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஆயுதப் படைகளின் மருத்துவ சேவைகள் அமைப்பால் இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப்பெரிய மாநாடாகும்.
ICMM
ICMM ஆனது பல்வேறு நாடுகளுக்கிடையேயான ஓர் சர்வதேச அமைப்பாகும். இது 1921-ல் தோற்றுவிக்கப்பட்டது.
இதன் தலைமையகம் பெல்ஜியத்தில் உள்ள பிரசெல்ஸ் நகரில் அமைந்துள்ளது.