ஜிஎஸ்டி ஆணையமானது இழப்பீடு மீதான கடன் வாங்குதல் தொடர்பான கூறுகளில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் 42வது சந்திப்பில் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
ஜிஎஸ்டி ஆணையம் என்பது ஜிஎஸ்டி தொடர்பான விவகாரங்கள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பரிந்துரைகளை அளிக்கும் சரத்து 279A-ன் கீழ் உருவாக்கப்பட்ட ஓர்அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
இந்த ஆணையமானது மத்திய நிதித் துறை அமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது. மத்திய வருவாய் துறை இணை அமைச்சர், நிதித்துறை இணை அமைச்சர் மற்றும்அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிதி அல்லது வரித்துறை அமைச்சர்கள் இதில் உள்ள பிற உறுப்பினர்களாவர்.
இதன் பரிந்துரைகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். இதன் முடிவுகள் 75% பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் எடுக்கப் படுகின்றன.
முக்கியப் பரிந்துரைகள்
ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பானது 2022 ஆம் ஆண்டிற்கு அப்பாலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
5 கோடிகளுக்கு மேல் விற்றுமுதல் உள்ள வரிசெலுத்துபவர்கள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இணக்கமானப் பெயரிடல் முறையை (HSN - Harmonised System Nomenclature) அளிக்க வேண்டும்.