TNPSC Thervupettagam

42வது ஜிஎஸ்டி ஆணையச் சந்திப்பு

October 11 , 2020 1380 days 765 0
  • ஜிஎஸ்டி ஆணையமானது இழப்பீடு மீதான கடன் வாங்குதல் தொடர்பான கூறுகளில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் 42வது சந்திப்பில் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
  • ஜிஎஸ்டி ஆணையம் என்பது ஜிஎஸ்டி தொடர்பான விவகாரங்கள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பரிந்துரைகளை அளிக்கும் சரத்து 279A-ன் கீழ் உருவாக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
  • இந்த ஆணையமானது மத்திய நிதித் துறை அமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது. மத்திய வருவாய் துறை இணை அமைச்சர், நிதித்துறை இணை அமைச்சர் மற்றும்  அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிதி அல்லது வரித்துறை அமைச்சர்கள் இதில் உள்ள பிற உறுப்பினர்களாவர்.
  • இதன் பரிந்துரைகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். இதன் முடிவுகள் 75% பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் எடுக்கப் படுகின்றன.

முக்கியப் பரிந்துரைகள்

  • ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பானது 2022 ஆம்  ஆண்டிற்கு அப்பாலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • 5 கோடிகளுக்கு மேல் விற்றுமுதல் உள்ள வரிசெலுத்துபவர்கள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இணக்கமானப் பெயரிடல் முறையை (HSN - Harmonised System Nomenclature) அளிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்