இந்திய குடிமையியல் கணக்கு சேவைகள், 2019 ஆம் ஆண்டு மார்ச் 01-ம் தேதி புதுல்லியில் தனது 43-வது குடிமையியல் கணக்கு தினத்தைக் (Indian Civil Accounts Service - ICAS) கொண்டாடியிருக்கின்றது.
இந்த வருட குடிமையியல் கணக்கு தினம், இந்தியக் குடிமையியல் கணக்கு அமைப்பின் தனித்துவத் திட்டமான பொது நிதி மேலாண்மை அமைப்பு என்ற திட்டத்தின் வளர்ச்சியைக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.
இந்தியக் குடிமையியல் கணக்கு சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் தனது நிலையை இந்நிறுவனம் சீராக உயர்த்தியிருக்கின்றது. மேலும் இது தொடங்கியதிலிருந்து மத்திய அரசின் பொது நிதி மேலாண்மையில் ஒரு முக்கியப் பங்கினை வகித்துள்ளது.