45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
September 21 , 2021
1162 days
613
- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரி) மன்றத்தின் 45வது கூட்டத்திற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
- உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
- கோவிட் -19 தொற்றுக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.
- ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் சேர்க்கப் படுவதை விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினர்.
- ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்துப் பின்வரும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
- அவை Zolgngelsma மற்றும் Viltepso (விலை சுமார் ரூ 16 கோடி), தசைச் சிதைவுக்குச் சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் ஆகியனவாகும்.
- கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப் படும் பொருட்களின் போக்குவரத்திற்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Post Views:
613