TNPSC Thervupettagam

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

September 21 , 2021 1162 days 610 0
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரி) மன்றத்தின் 45வது கூட்டத்திற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
  • உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • கோவிட் -19 தொற்றுக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.
  • ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் சேர்க்கப் படுவதை விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினர்.
  • ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்துப் பின்வரும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
  • அவை Zolgngelsma மற்றும் Viltepso (விலை சுமார் ரூ 16 கோடி), தசைச் சிதைவுக்குச் சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் ஆகியனவாகும்.
  • கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப் படும் பொருட்களின் போக்குவரத்திற்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்