TNPSC Thervupettagam

46,000 ஆண்டுகள் பழமையான புழுக்கள்

August 4 , 2023 478 days 316 0
  • ஐந்தாண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் கண்டறியப்பட்ட இரண்டு வகையான உறைந்த நிலையிலான நுண்ணிய நூற்புழுக்கள் அல்லது உருளைப்புழுக்களை அறிவியலாளர்கள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர்.
  • சைபீரிய நிலத்தடி உறைபனியில் இருந்து அவை மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டுள்ளன.
  • இந்தப் புழுக்கள் 45,839 மற்றும் 47,769 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் இருந்து உறைந்து காணப் படுகின்றன.
  • அவற்றில் ஒன்று இது வரை கண்டுபிடிக்கப்படாத முற்றிலும் புதிய இனமாகும்.
  • நூற்புழுக்கள், மற்றும் மிகவும் பிரபலமான, டார்டிகிரேட்கள் (மெது நடையன்) போன்ற பல விலங்குகள், “கிரிப்டோபயோசிஸ்” (நீள் உறக்கம்) எனப்படுகின்ற செயலற்ற நிலையில் நுழைவதன் மூலம் மிகவும் கடுமையானச் சூழ்நிலைகளிலும் உயிர் வாழக் கூடியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்