ஐந்தாண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் கண்டறியப்பட்ட இரண்டு வகையான உறைந்த நிலையிலான நுண்ணிய நூற்புழுக்கள் அல்லது உருளைப்புழுக்களை அறிவியலாளர்கள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர்.
சைபீரிய நிலத்தடி உறைபனியில் இருந்து அவை மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டுள்ளன.
இந்தப் புழுக்கள் 45,839 மற்றும் 47,769 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் இருந்து உறைந்து காணப் படுகின்றன.
அவற்றில் ஒன்று இது வரை கண்டுபிடிக்கப்படாத முற்றிலும் புதிய இனமாகும்.
நூற்புழுக்கள், மற்றும் மிகவும் பிரபலமான, டார்டிகிரேட்கள் (மெது நடையன்) போன்ற பல விலங்குகள், “கிரிப்டோபயோசிஸ்” (நீள் உறக்கம்) எனப்படுகின்ற செயலற்ற நிலையில் நுழைவதன் மூலம் மிகவும் கடுமையானச் சூழ்நிலைகளிலும் உயிர் வாழக் கூடியவை ஆகும்.