4E வேவ் எனப்படும் ஜம்மு மாணவர் தலைமையிலான தேசிய எரிசக்தி வளங்காப்பு இயக்கம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கமானது நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், ஆற்றலைச் சேமிப்பதற்காக தனிநபர்கள் மற்றும் சமூகங்களில் பொறுப்பு உணர்வை ஏற்படுத்தச் செய்வதற்கும் செயலாற்றுகிறது.
4E வேவ் இயக்கம் ஆனது நான்கு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது:
சுற்றுச்சூழலுக்கு ஏற்றத் தன்மை: சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் சேமிப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல்
பொருளாதாரம்: தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்குப் பொருளாதார நன்மைகளுக்கு வழி வகுக்கும் ஆற்றல் சேமிப்பு தீர்வுகளை வலியுறுத்துதல்
கல்வி: ஆற்றல் சேமிப்பு முறைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பொதுமக்களுக்குக் கற்பிப்பதில் கவனம் செலுத்துதல்
அதிகாரமளித்தல்: ஆற்றலைப் பாதுகாப்பதில் தீவிரப் பங்கு வகிக்க தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரமளித்தல்.