ஓபன் சிக்னல் (Open Signal) எனும் கம்பியில்லா இணைய இணைப்பின் பரவலெல்லை வரைபடமிடல் நிறுவனத்தின் (wireless coverage mapping company) அறிக்கையின் படி 4G இணைப்பில் (4G connectivity) இந்தியாவின் 20 மிகப்பெரிய நகரங்களுள் பாட்னா முதலிடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் பாட்னாவிற்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் கான்பூர் உள்ளது.
4G இணைய சேவை வசதி கிடைப்பதில் பெங்களூர் முதல் பத்து இடங்களில் உள்ளது. மும்பை 15வது இடத்திலும், டெல்லி 17வது இடத்திலும் உள்ளன.
மேலும் ஓபன் சிக்னல் நிறுவனத்தின் அறிக்கையானது நாடு முழுவதும் 4G நெட்வோர்க் சேவை விரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பிற இந்திய நகரங்களைக் காட்டிலும் கிழக்கிந்திய மற்றும் மத்திய பிராந்தியங்களைச் சேர்ந்த நகரங்கள் சிறந்த 4G இணைய வசதியை கொண்டுள்ளதாக இலண்டணைச் சேர்ந்த ஓபன் சிக்னல் நிறுவனம் தெரிவித்துள்ளது.