பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC) நான்காவது மாநாடு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்றது.
‘அமைதியான வளமான மற்றும் நிலையான வங்காளப் பிராந்தியத்தை நோக்கி‘ என்பதே இந்த மாநாட்டின் மையக் கருவாகும்.
இந்த உச்சிமாநாட்டில் நேபாள பிரதம மந்திரி கே.பி. ஷர்மா ஒலியால் வழங்கப்பட்ட 18-அம்சங்களைக் கொண்ட காத்மண்டு பிரகடனமானது, அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில், 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை இலங்கை நடத்தவிருக்கின்றது.