குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் நான்காவது மதிப்பாய்வினை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்தக் குழுவானது வருடாந்திர ரீதியாக அனைத்து நாடுகளின் அறிக்கைகளையும் மதிப்பாய்வு செய்து மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் வழங்குகிறது.
இந்திய அரசானது 1979 ஆம் ஆண்டில் ICCPR உடன்படிக்கையில் ஒரு பங்குதாரராக இடம் பெற்றது என்பதோடு இந்திய அரசானது கடைசியாக 1997 ஆம் ஆண்டில் இத்தகைய மதிப்பாய்விற்கு உட்பட்டது என்ற வகையில் இது வரையில் இது போன்ற மூன்று மதிப்பாய்வுகளுக்கு உட்பட்டுள்ளது.