ஒடிசா மாநிலத்தின் மங்களஜோதி என்னுமிடத்தில் 4வது தேசிய சிலிகா பறவை என்ற திருவிழா நடைபெற்றது.
குளிர்காலத்தில் மங்களஜோதிக்கு வருகை தரும் 200 பறவை இனங்களைச் சேர்ந்த 10 லட்சம் பறவைகளை இந்த திருவிழா கொண்டாடுகிறது.
சிலிகா ஏரி ஆனது பறவைகளுக்கான மத்திய ஆசிய வலசைப் போக்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
மேலும் இது கிழக்குக் கரையோரமாக ஆர்க்டிக் மற்றும் ஆர்க்டிக் பகுதி சார்ந்த பிராந்தியங்களில் இருந்து புலம் பெயரும் பறவைகள் மேற்கொள்ளும் வலசைப் போக்கின் போதும், அவை திரும்பி வரும் போதும் அவற்றிற்கு ஒரு முக்கிய இடை நிறுத்த இடமாகவும் உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரியான சிலிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மங்களஜோதி, "ஆசியப் பறவைகளின் சொர்க்கம்" என்று அழைக்கப் படுகிறது.