உலக வர்த்தக அமைப்பின் மதிப்பீட்டின்படி, உலகளாவிய எண்ணிமச் சேவைகளின் ஏற்றுமதியானது வருடாந்திர அடிப்படையில் 9 சதவீதம் என்ற அதிகரிப்புடன் 2023 ஆம் ஆண்டில் 4.25 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.
இது உலகளாவியச் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் 13.8 சதவிகிதம் ஆகும்.
எண்ணிமச் சேவைகளின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 17 சதவிகிதம் உயர்ந்து 257 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
இதன் மூலம், இந்தப் பிரிவில் உலகின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆனது சீனா மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் 4 சதவீத அதிகரிப்பை விட அதிகமாக இருந்தது.