மார்க் IV LUC கப்பல்கள் வரிசையின் 4-வது வகையில் மொத்தம் எட்டு கப்பல்கள் கொல்கத்தாவிலுள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுநர் மற்றும் பொறியாளர் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கொல்கத்தாவில் இந்தியக் கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது.
மார்க் IV LUC கப்பல் வகையில் முதல் கப்பலான INS LCU51, 2016 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் இரு LCU கப்பல்கள் இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தியக் கடற்படையில் பயன்படுத்தப்படும் மார்க் III LUC கப்பல்களின் மேம்படுத்தப்பட்ட வகையே மார்க் IV LCU (LCU – Landing Craft utility – விமான தரையிறங்கு வசதி) கப்பல்களாகும்.
மார்க் – IV வகையைச் சேர்ந்த இந்த எட்டு கப்பல்களும் ஆம்பிபியன் என்ற நீர்நில வகைக் கப்பல்களாகும்.
முதன்மை போர் பீரங்கிகள், வெடிபொருட்கள் கொண்ட வாகனங்கள், படைகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை கப்பலிலிருந்து கடற்கரைக்கு மாற்றுவதற்கு இவை பயன்படுத்தப் படுகின்றன.
LUC மார்க்-IV கப்பல்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் பயன்படுத்தப்படும்.