IQAir என்ற அமைப்பானது 5வது வருடாந்திர உலகக் காற்றுத் தர அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் இடம் பெற்ற சுமார் 60% இந்திய நகரங்களில் காணப்படும் வருடாந்திர PM2.5 அளவுகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட குறைந்தபட்சம் ஏழு மடங்கு அளவு அதிகமாக பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், சராசரி PM2.5 அளவு 53.3 pg/m3 ஆக இருந்தது.
இது 2021 ஆம் ஆண்டில் 58.1 pg/m3 என்ற அளவை விட சற்று குறைவாக உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பிவாடி நகரம் 92.7 என்ற PM (நுண்மத் துகள்கள்) அளவுகளுடன் நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது.
92.6 என்ற PM அளவுகளுடன் டெல்லி மிகவும் மாசுபட்ட பெருநகரமாகத் திகழ்கிறது.
மோசமான காற்றுத் தரக் குறியீடு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் இருந்த ஐந்தாவது இடத்தில் இருந்து பின்னடைந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரம் 10 இடங்களுக்கு மேல் முன்னேறி 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட நகரமாக மாறியுள்ளது.
மத்திய மற்றும் தெற்காசியாவில் உள்ள மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
பெங்களூரு நகரில் 29 ஆக இருந்த PM2.5 அளவு 31.5 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக உயர்ந்துள்ளது.
ஹைதராபாத் நகரில் 39.4 ஆக இருந்த PM2.5 அளவு 42.4 மைக்ரோகிராம்/கன மீட்டராக அதிகரித்துள்ளது.
டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் மாசுபாட்டின் அளவு சில மைக்ரோகிராம் குறைந்துள்ளது.
கொல்கத்தா நகரின் மாசுபாட்டு அளவில் எந்தவித மாற்றமும் இல்லை.
அமெரிக்காவின் பசிபிக் பிரதேசமான குவாம் நகரானது 1.3 என்ற PM2.5 செறிவுடன் உலகின் மற்ற நாடுகளை விட தூய்மையானக் காற்றைக் கொண்ட நகரமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா 2.8 என்ற அளவுடன் தூய்மையான காற்றை கொண்டு உள்ளது.