TNPSC Thervupettagam

5வது வருடாந்திர உலகக் காற்றுத் தர அறிக்கை 2022

March 26 , 2023 481 days 248 0
  • IQAir என்ற அமைப்பானது 5வது வருடாந்திர உலகக் காற்றுத் தர அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • இந்த அறிக்கையில் இடம் பெற்ற சுமார் 60% இந்திய நகரங்களில் காணப்படும் வருடாந்திர PM2.5 அளவுகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட குறைந்தபட்சம் ஏழு மடங்கு அளவு அதிகமாக பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், சராசரி PM2.5 அளவு 53.3 pg/m3 ஆக இருந்தது.
  • இது 2021 ஆம் ஆண்டில் 58.1 pg/m3 என்ற அளவை விட சற்று குறைவாக உள்ளது.
  • ராஜஸ்தானில் உள்ள பிவாடி நகரம் 92.7 என்ற PM (நுண்மத் துகள்கள்) அளவுகளுடன் நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது.
  • 92.6 என்ற PM அளவுகளுடன் டெல்லி மிகவும் மாசுபட்ட பெருநகரமாகத் திகழ்கிறது.
  • மோசமான காற்றுத் தரக் குறியீடு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இது முந்தைய ஆண்டில் இருந்த ஐந்தாவது இடத்தில் இருந்து பின்னடைந்துள்ளது.
  • பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரம் 10 இடங்களுக்கு மேல் முன்னேறி 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட நகரமாக மாறியுள்ளது.
  • மத்திய மற்றும் தெற்காசியாவில் உள்ள மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
  • பெங்களூரு நகரில் 29 ஆக இருந்த PM2.5 அளவு 31.5 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக உயர்ந்துள்ளது.
  • ஹைதராபாத் நகரில் 39.4 ஆக இருந்த PM2.5 அளவு 42.4 மைக்ரோகிராம்/கன மீட்டராக அதிகரித்துள்ளது.
  • டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் மாசுபாட்டின் அளவு சில மைக்ரோகிராம் குறைந்துள்ளது.
  • கொல்கத்தா நகரின் மாசுபாட்டு அளவில் எந்தவித மாற்றமும் இல்லை.
  • அமெரிக்காவின் பசிபிக் பிரதேசமான குவாம் நகரானது 1.3 என்ற PM2.5 செறிவுடன் உலகின் மற்ற நாடுகளை விட தூய்மையானக் காற்றைக் கொண்ட நகரமாக உள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா 2.8 என்ற அளவுடன் தூய்மையான காற்றை கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்