TNPSC Thervupettagam

5வது வெப்பமான ஆண்டு - 2022

January 10 , 2023 690 days 364 0
  • இந்தியாவில் 1901 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பதிவான ஐந்தாவது மிக வெப்பமான ஆண்டாக, 2022 ஆம் ஆண்டை  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
  • இந்த ஆண்டில் வருடாந்திர சராசரி நில மேற்பரப்பு காற்றின் வெப்பநிலையானது, நீண்ட காலச் சராசரியை விட 0.51 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
  • நீண்ட காலச் சராசரி என்பது 1981 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்திற்கான சராசரி வெப்பநிலையாகும்.
  • இது 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் காணப்பட்ட அதிக வெப்பநிலையை விடக் குறைவாகும்.
  • 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான சராசரி வெப்பநிலை 0.71 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • 1971 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதிவான மதிப்புகளின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான மழைப் பொழிவு அதன் நீண்ட காலச் சராசரி மதிப்பில் 108 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்