TNPSC Thervupettagam

5 நாடுகளில் AYUSH மருத்துவ முறையின் இருக்கைகள்

December 21 , 2024 2 days 59 0
  • ஆயுஷ் அமைச்சகம் ஆனது வங்காளதேசம், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், லாத்வியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் செயல்பாட்டு நிலையில் உள்ள கல்வி சார் AYUSH இருக்கைகளை நிறுவியுள்ளது.
  • வெளிநாட்டு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பானது, சர்வ தேச அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளை மிக மேம்படுத்துவதற்கான இந்தியாவின் மாபெரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
  • வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆயுஷ் இருக்கைகளை நிறுவுவது சர்வதேச ஒத்துழைப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றினை உருவாக்குவதற்கும், ஆயுஷ் மருத்துவ முறையின் நன்மைகளை மேம்படுத்துவதற்குமான ஒரு முக்கிய உத்தியாகும்.
  • இந்த இருக்கையானது பொதுவாக ஆயுஷ் மருத்துவ முறை பற்றிய கல்வி பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளதோடு இது அது நிறுவப்படும் நாட்டில் அதன் அங்கீகாரம் மற்றும் ஏற்பிற்குப் பங்களிக்கிறது.
  • பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் வெளிநாடுகளுடனான ஒத்துழைப்புக்காக என 24 நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் ஆயுஷ் மருத்துவ முறை பற்றிய கல்வியியல் இருக்கைகளை அமைப்பதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் சுமார் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்