இந்திய அஞ்சல் துறையானது பின்வரும் 5 நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அகமதாபாத் நகரம் - சர்கேஜ் ரோசா
கோவாவின் தேவாலயங்கள் மற்றும் கன்னி மாடம், போம் ஜீஸஸ் தேவாலயம்.
பட்டாடக்கல் நினைவுச் சின்னங்கள் – கர்நாடகா
கஜீராஹோ நினைவுச் சின்னங்கள் ஜவேரி ஆலயம் – மத்தியப் பிரதேசம்
குதுப் மினார் மற்றும் அதன் நினைவுச் சின்னங்கள், தில்லி.
இது இந்தியா-III என்ற பிரிவில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து அஞ்சல் தலைகளின் மிகச் சிறிய அளவிலான அட்டையையும் வெளியிட்டுள்ளது.
சர்கேஜ் ரோசா என்பது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தலைநகரக் குறியீட்டைப் பெற்று உள்ளது.