TNPSC Thervupettagam

5-வது இந்தியா-CLMV வணிக மாநாடு

May 28 , 2018 2247 days 675 0
  • 5-வது இந்தியா-CLMV வணிக மாநாடு (கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம்), கம்போடியா நாட்டின் பினோம் பெண்ணில் (Phnom Penh) நடைபெற்றது.
  • இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் கம்போடியாவின் வர்த்தகத் துறை அமைச்சகம் ஆகியவை கூட்டிணைந்து இம்மாநாட்டை நடத்தின.
  • இந்திய தொழிலகக் கூட்டமைப்பானது (Confederation of Indian Industry -CII) இந்நிகழ்ச்சியின் நிறுவன கூட்டுப் பங்காளர் ஆகும்.

  • இந்தக் கூட்டமானது, மேம்பாட்டிற்காக CLMV நாடுகளின் பொருளாதாரங்களைப் பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்துவதற்காக ஒரு வாய்ப்பை வழங்குவதோடு, இந்தியாவுடன் பொருளாதார ஈடுபாட்டை (Economic Engagement) மேம்படுத்துவதற்காக அதிக வாய்ப்பையும் வழங்குகிறது.
  • CLMV மண்டலமானது, அனைத்து ASEAN நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. மேலும், இம்மண்டலமானது இந்தியாவிற்கு ASEAN நாடுகளின் மிகப்பெரிய சந்தைகளின் அணுகலையும் வழங்குகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்