5வது தேசியத் தரங்களின் மாநாடு “தரநிலைப்படுத்தலுக்கான இந்தியத் தேசிய யுக்திகளை செயல்படுத்துதல்” என்ற கருத்துருவுடன் புது தில்லியில் நடைபெற்றது.
இதை மத்திய வர்த்தகத் துறை மற்றும் இந்தியத் தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
வர்த்தகத்திற்கான இடையூறு தடைகள் / தூய்மை மற்றும் தாவரத் தூய்மை அறிவிப்புக்கான ஆய்வுகள் மீது இரண்டு அறிக்கைகளை இந்தியத் தொழிற்சங்க கூட்டமைப்பு (Confederation of Indian Industry) - ASL, தரநிலைப்படுத்தலுக்கான இந்தியத் தேசிய உத்திகள் அமைப்பு (INSS-Indian National Strategy for Standardization) மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வெளியிட்டன.
தரநிலைப்படுத்துதலுக்கான இந்தியத் தேசிய உத்திகள் அமைப்பானது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் உண்டான ஒரு வெளிப்பாடாகும்.