TNPSC Thervupettagam

5G வழிகாட்டும் குழு - AJ பால்ராஜ்

August 25 , 2018 2284 days 728 0
  • ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் AJ பால்ராஜ் தலைமையிலான 5G வழிகாட்டும் குழுவானது தனது அறிக்கையினை தொலைத் தொடர்புத் துறையிடம் (DOT-Department of Tele Communication) சமர்ப்பித்தது.
  • 5G-ஐ (ஐந்தாம் தலைமுறை) பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்காக 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசாங்கம் இக்குழுவை அமைத்தது.
  • இதன் நோக்கம் கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறைக்காக உலகத் தரங்களை வரையறுப்பதற்கான செயல்முறையில் பங்கெடுப்பதை ஊக்குவிப்பதாகும்.
  • இந்தியாவில் 5G-ஆனது வணிக ரீதியாக 2020-ல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5G-ன் பொருளாதாரத் தாக்கமானது $1 டிரில்லியனைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவில் 5G-ஐ பயன்படுத்துதலை தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு அடிப்படையில் மூன்று நிலைகளாக வகைப்படுத்த இக்குழு பரிந்துரைத்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்