TNPSC Thervupettagam

5 ஆண்டு கால சொத்து வரி வளர்ச்சி

November 26 , 2024 49 days 85 0
  • 2019 (FY19) மற்றும் 2024 (FY24) ஆம் நிதியாண்டுகளுக்கு இடையில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (மற்றும் ஒன்றியப் பிரதேசம்-டெல்லி) அடிப்படையிலான முன்னணி மாநிலங்களின் மாநகராட்சிக் கழகங்கள் சுமார் 3 முதல் 26 சதவிகிதம் வரையிலான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தினைப் (CAGR) பதிவு செய்துள்ளன.
  • இவற்றில், டெல்லி, இராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை முறையே இந்த வரி வருவாயில் 26 சதவீதம், 23 சதவீதம் மற்றும் 23 சதவீதம் என்ற அளவில் அதிகபட்ச CAGR விகிதத்தினைப் பதிவு செய்துள்ளன.
  • மேற்கு வங்காளத்தில், 3 சதவீதம் என்ற மிகக் குறைவான CAGR பதிவானது.
  • அகில இந்திய அடிப்படையில், இந்த வரியானது மாநகராட்சிக் கழகங்களின் மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 16 சதவீதத்திற்கும் அதிகமாகவும் அவற்றின் சொந்த வரி வருவாயில் 70 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளது.
  • 2024 ஆம் நிதியாண்டில் தெலுங்கானாவின் மாநகராட்சிக் கழகங்களின் மொத்த வருவாயில் பாதி (50 சதவீதம்) அளவானது சொத்து வரிகள் ஆகும் என்ற நிலையில் கர்நாடகா (43 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (35 சதவீதம்), தமிழ்நாடு (27 சதவீதம்) ஆகியவை இதில் முன்னணியில் இடம் பெற்றுள்ள இதர மாநிலங்கள் ஆகும்.
  • இந்தியாவின் மிகப் பெரியப் பண வளம் கொண்ட மகாராஷ்டிராவின் மாநகராட்சிக் கழகங்கள், சொத்து வரி மூலம் வெறும் 11 சதவீத வருவாயைப் பெறுவதுடன் மிகவும் பல்வகைப்படுத்தப்பட்டுள்ள (பரவலாக்கப்பட்ட வரி வருவாய்) மாநிலமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்