தமிழ்நாடு மாநில முதல்வரான எடப்பாடி கே பழனிசாமி தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வேண்டி 5 மணி மண்டபங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக் கட்சித் தலைவர் A.T. பன்னீர் செல்வம், தமிழ்த் திரையுலக நட்சத்திரமான MKT தியாகராஜ பாகவதர் ஆகியோரது நினைவு மண்டபங்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள K. அபிஷேகபுரத்தில் அமைய இருக்கின்றது.
கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நினைவு மண்டபம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளையில் அமைக்கப்பட இருக்கின்றது.
அல்லால இளைய நாயக்கர் மணி மண்டபம் நாமக்கல் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஜேடர்பாளையத்தில் அமைக்கப்பட இருக்கின்றது.