5-வது இந்தியா-CLMV வணிக மாநாடு (கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம்), கம்போடியா நாட்டின் பினோம் பெண்ணில் (Phnom Penh) நடைபெற்றது.
இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் கம்போடியாவின் வர்த்தகத் துறை அமைச்சகம் ஆகியவை கூட்டிணைந்து இம்மாநாட்டை நடத்தின.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பானது (Confederation of Indian Industry -CII) இந்நிகழ்ச்சியின் நிறுவன கூட்டுப் பங்காளர் ஆகும்.
இந்தக் கூட்டமானது, மேம்பாட்டிற்காக CLMV நாடுகளின் பொருளாதாரங்களைப் பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்துவதற்காக ஒரு வாய்ப்பை வழங்குவதோடு, இந்தியாவுடன் பொருளாதார ஈடுபாட்டை (Economic Engagement) மேம்படுத்துவதற்காக அதிக வாய்ப்பையும் வழங்குகிறது.
CLMV மண்டலமானது, அனைத்து ASEAN நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. மேலும், இம்மண்டலமானது இந்தியாவிற்கு ASEAN நாடுகளின் மிகப்பெரிய சந்தைகளின் அணுகலையும் வழங்குகிறது.