TNPSC Thervupettagam

5-வது இருதரப்பு பேச்சுவார்த்தை – இந்தியா மற்றும் மலேசியா

January 14 , 2018 2379 days 703 0
  • இந்தியா மற்றும் மலேசியாவிற்கிடையே மரபுசார்ந்த மருத்துவ முறைகள் மீதான கூட்டுறவிற்கான 5-வது இருதரப்பு பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • 2010-ல் இந்தியா மற்றும் மலேசியாவிற்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இந்த பேச்சுவார்த்தை ஆகும்.
  • இந்தியத் தரப்பில் ஆயுஷ் அமைச்சகத்தின் கூட்டுச் செயலாளர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்க மலேசிய சுகாதார அமைச்சகத்தின் துணை பொது இயக்குனர் அந்நாட்டிற்காக தலைமை தாங்கினார்.
  • இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் :
    • மலேசியாவின் உடார் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துதல்.
    • மலேசிய நிபுணர்களுக்கு இந்தியாவில் பஞ்சகர்ம சிகிச்சை முறையில் நிபுணத்துவ பயிற்சி அளித்தல்.
    • மருத்துவ ஆய்வு சோதனைகளுக்காக ஆயுர்வேத மற்றும் மரபார்ந்த பொருட்களின் கூட்டிணை மீதான பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து மதிப்பிடல்.
    • நல்ல தரமான ஆய்வுக்கூட முறைகள் (Good Laboratory Practices - GLP) அடிப்படையில் ஆயுர்வேத பொருட்கள் மீதான பாதுகாப்பு மதிப்பாய்வு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்