ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற இருக்கும் 5வது கிழக்கு பொருளாதார மன்றத்தின் (செப்டம்பர் 4 - 6) விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்.
இது ரஷ்யாவால் 2015 இல் நிறுவப் பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் விளாடிவோஸ்டோக்கில் நடைபெறுகின்றது.
இந்த சர்வதேச மன்றமானது தொலைதூர கிழக்கில் இருக்கும் வளம் மிக்க ரஷ்யாவில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக நடத்தப் படுகின்றது.