புது தில்லியில் நிறைவு பெற்ற டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் வீரர்கள் 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
இந்தியாவிற்கு அடுத்து இந்தோனேஷியா 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஹாங்காங் 4 தங்கம் மற்றும் 2 வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
தங்கம் வென்ற இந்திய வீரர்கள்
மயூரி லூட் - இளம் பெண்களுக்கான 500 மீட்டர்.
எசோ, அபிஷேக், ஜெம்ஸ் சிங் - இளம் ஆடவர் தடகள குழு
சொபா தேவி - பெண்களுக்கான 3 கி.மீ. தனிநபர் சைக்கிள் போட்டி
சுவஸ்தி சிங் - இளம் பெண்களுக்கான 2 கி.மீ. தனிநபர் சைக்கிள் போட்டி