TNPSC Thervupettagam

50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா

November 29 , 2019 1704 days 585 0
  • இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (International Film Festival of India - IFFI) பொன்விழா பதிப்பானது கோவாவில் நடந்தது.
  • 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ ஃபெலினி பதக்கம் ஆனது IFFI அமைப்புக்கு வழங்கப்பட்டது.
  • இந்த விருதை முதன்முதலில் யுனெஸ்கோ அமைப்பு  1994 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 125வது ஆண்டு விழாவில் வழங்கியது.
  • விருதுகள்
    • சிறந்த படம்: பிளேஸ் ஹாரிசன் இயக்கிய 'துகள்கள்' என்னும் படம்
    • சிறந்த இயக்குனர்: “ஜல்லிக்கட்டு” படத்திற்காக லிஜோ ஜோஸ் பெல்லிசெரி
    • சிறந்த நடிகர்: மரிகெல்லா படத்திற்காக சியு ஜார்ஜ்
    • சிறந்த நடிகை: ‘மை காட்’ என்ற மராத்தி படத்திற்காக உஷா ஜாதவ்
  • அடுத்த IFFI தனது அடுத்த ஆண்டு விழாவிற்கான கருப்பொருளாக சத்யஜித் ரேவின் நூற்றாண்டைக்  கொண்டாடும் பொருட்டு அவரது திரைப்படங்களைக் கொண்டாட இருக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்