மக்கள்தொகை அதிகரித்து வரும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்களை நிர்வாகிப்பதற்காக கூடுதல் வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலான சில கிராமங்களின் குழுவை உள்ளடக்கியதாகும்.
சென்னை மாவட்டத்தில் 14, செங்கல்பட்டு மாவட்டத்தில் 4, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 புதிய வருவாய் குறுவட்டங்களும் நிர்ணயிக்கப் படும்.
மதுரையில் 7 புதிய வருவாய் குறுவட்டங்களும், சேலத்தில் 4 புதிய வருவாய் குறு வட்டங்களும் நிர்ணயிக்கப்படும் என்பதோடு திருநெல்வேலிக்குக் கூடுதலாக 3 புதிய வருவாய் குறுவட்டங்கள் நிர்ணயிக்கப்படும்.
இதில் தூத்துக்குடி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூர், திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் விழுப்புரம் போன்ற சில நகரங்களுக்கு தலா ஒரு புதிய வருவாய் குறுவட்டங்கள் நிர்ணயிக்கப் படும்.
செங்கல்பட்டு, திருச்சி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் 25 புதிய வருவாய் கிராமங்களையும் அரசாங்கம் உருவாக்க உள்ளது.
தற்போது, இந்த மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 1,197 புதிய வருவாய் குறுவட்டங்கள் மற்றும் 16,744 கிராமங்கள் உள்ளன.