தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) ஆனது 50 புதிய எதிர்கால நுட்பம் சார் திறன் மையங்கள் (FSCs) மற்றும் 10 NSDC சர்வதேச பயிற்றுக் கழகங்களை அமைக்க உள்ளது என்று அறிவித்துள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை தேவைகளுடன் கல்வியை நன்கு இணைப்பதன் மூலம் கோட்பாடு சார் அறிவுக்கும் நடைமுறை திறன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை சுமார் 33 உலகளாவிய நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன என்பதோடு மேலும் உயர் கல்வி நிறுவனங்களில் (HEIs) 21 எதிர்கால நுட்பம் சார் திறன் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.