சீனாவின் 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் சாம்பியனான லியூ ஹாங் 50 கிலோ மீட்டர் நடைபயணப் போட்டியில் வெற்றி பெற்று முந்தைய உலக சாதனையை முடியடித்தார்.
சீனாவின் யாங்சானின் நடைபெற்ற சீன நடைபயண கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இவர் 3 மணி 59 நிமிடம் 15 வினாடிகளில் 50 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்தார்.
இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் 4 மணி நேரத்திற்குள் தொலைவைக் கடந்து வெற்றி பெற்று உலக சாதனையை முறியடித்த முதலாவது பெண் வீராங்கனையாக இவர் உருவெடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் IAAF உலக நடை பயண அணிகள் சாம்பியன்ஷிப்பில் முந்தைய உலக சாதனையாக சீனாவின் லியாங் ரூய் 50 கிலோ மீட்டர் தொலைவை 4:04:36 வினாடிகளில் கடந்தார். இவர் லியாங் ரூயை விட 5 நிமிடங்களுக்கு குறைவாக அத்தொலைவைக் கடந்துள்ளார்.
தற்பொழுது இவர் 20 கிலோ மீட்டர் மற்றும் 50 கிலோ மீட்டர் ஆகிய இரண்டிலும் உலக சாதனையைப் படைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் லா கொருனாவில் நடைபெற்ற 20 கிலோ மீட்டர் நடைபயணப் போட்டியை 1:24:38 என்ற நேரத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.