500 GW உற்பத்தி இலக்கினை அடைவதற்கான தேசிய மின்சாரத் திட்டம்
October 20 , 2024 36 days 97 0
இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனையும், 2032 ஆம் ஆண்டிற்குள் 600 ஜிகாவாட்டிற்கும் மேலான உற்பத்தியினையும் அடையும் நோக்கத்துடன் தனது தேசிய மின்சாரத் திட்டத்தினை (மின் பகிர்மானம்) வெளியிட்டு உள்ளது.
தேசிய மின்சாரத் திட்டம் ஆனது, 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நிகரச் சுழிய அளவிலான உமிழ்வு என்ற ஒரு இலக்கை ஆதரிக்க முயல்கிறது.
இது அடுத்த பத்தாண்டுகளில் 1,91,000 மின் சுற்று கிலோமீட்டர்கள் (ckm) மின் பகிர்மான கம்பி வடங்கள் மற்றும் 1,270 GVA மின்சாரத்தைப் பரிமாற்றும் திறனை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒழுங்கற்றத் தன்மையை மேலாண்மை செய்வதற்கு மிக அவசியமான 47 ஜிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் 31 ஜிகாவாட் நீரேற்றப் புனல் மின்னாற்றல் சேமிப்பு ஆலைகளை ஒருங்கிணைப்பதற்கானப் பல ஏற்பாடுகளும் இதில் அடங்கும்.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தைய நிலவரப்படி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த மின்சார உற்பத்தி திறன் 201.45 ஜிகாவாட்டாக உள்ளது.
இது நாட்டின் மொத்த நிறுவப்பட்ட திறனில் 46.3 சதவீதம் ஆகும்.