தெற்கு சிலியில் உள்ள ஒரு காட்டில், ஒரு பெரிய மரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறது.
இந்த மரமானது, "பழம்பெரும் முதுமரம்" என்று அழைக்கப்படுகிறது.
ஃபிட்ஸ்ரோயா கப்ரெசோய்ட்ஸ் எனப்படும் இந்த மரம் தென் அமெரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதிகளில் உள்ள ஒரு வகை சைப்ரஸ் மரமாகும்.
இந்த மரத்தின் தண்டு நான்கு மீட்டர் (13 அடி) விட்டம் மற்றும் 28 மீட்டர் உயரம் கொண்டது.
பிரித்தெடுக்கப்பட்ட மாதிரி மற்றும் பிற கால கணிப்பு முறைகளானது, இந்த மரம் 5,484 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றன.
இதன் மதிப்பிடப்பட்ட வயதானது, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 4,853 ஆண்டுகள் பழமையான ப்ரிஸ்டில்கோன் பைன் மரமான மெதுசெலஹாவை விட 500 ஆண்டுகளுக்கும் மேலான ஆண்டுகள் வித்தியாசத்தில் அதன் தற்போதைய ஒரு சாதனையை முறியடிக்கிறது.