2022-2023 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 51,000 கோடி ரூபாய் நிதி திரட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இது மாநில மேம்பாட்டுக் கடன்கள் எனப்படும் முறையில் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் திரட்டப் படும்.
இது 2022 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (Q4) பெறப்பட்ட 35,000 கோடி ரூபாயை விட 45.7% அதிகமாகும்.
2022 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலாண்டில் மாநில அரசு 49,000 கோடி ரூபாயினைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், இது 2021 ஆம் நிதியாண்டின் இதே கால கட்டத்தில் பெறப்பட்ட 52,000 கோடி ரூபாயை விடக் குறைவாகும்.
2022-23 ஆம் நிதியாண்டில் (அக்டோபர் மாதம் வரை) தமிழக அரசின் மொத்த வருவாய் வரவு 1,29,600.46 கோடியாகும்.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 1,01,047.40 கோடி ரூபாயிலிருந்து 28.3% அதிகமாகும்.
2022 ஆம் நிதியாண்டின் அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி தமிழக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை 25,931.10 கோடி ரூபாயாக உள்ளது.
இது 2021 ஆம் நிதியாண்டின் அக்டோபர் மாத இறுதியில் 28,108.69 கோடி ரூபாயாக இருந்தது.
2021-22 ஆம் நிதியாண்டில், மாநிலத்தின் மொத்தக் கடன்கள் 87,000 கோடியாகும்.